fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

மின்கட்டணம் 10 மடங்கு அதிகமா? இல்லவே இல்லை…! விளக்கும் அமைச்சர் தங்கமணி!

Minister thangamani explanation

நாமக்கல்:

மின் கட்டணம் 10 மடங்கு விதிக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறு  என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

மின் கட்டணத்தை பொறுத்தவரை ஜனவரியில் என்ன கட்டணமோ அதை செலுத்த வேண்டும் என்று சொல்லி இருந்தோம். இப்போது புதியதாக கணக்கு எடுக்கிறோம்.

ஏற்கனவே 2 மாதங்களுக்கும் தற்போது எடுத்த 2 மாதங்களும் சேர்த்து நான்கு மாதமாகிறது. அந்த 4 மாதத்துக்கும் இரண்டு மாதத்துக்கு உண்டான யூனிட் எவ்வளவு என்று பிரித்து கணக்கிட்டு பில் அனுப்பி வருகிறோம்.

மின் கட்டணம் 10 மடங்கு விதிக்கப்பட்டுள்ளது என்பது தவறான தகவல். ஊரடங்கால்அனைவரும் வீட்டில் இருந்ததால் மின் தேவை அதிகரித்துள்ளது என்று கூறினார்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close