fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

மத்தியப் பிரதேச கவர்னர் தாண்டன் மறைவு…! உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்!

Madhya Pradesh governor expired lalji tandon

போபால்:

மத்தியப் பிரதேச கவர்னர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.

மத்தியப் பிரதேச கவர்னர் லால்ஜி தாண்டன். அவருக்கு வயது 85.  உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந் நிலையில் அவர் இன்று காலை காலமானார்.  இதனை அவரது மகன் அசுதோஷ் தெரிவித்து உள்ளார்.

தாண்டன் ஜூன் 11 அன்று சுவாசப்பிரச்சினை காரணமாக லக்னோவில் உள்ள மெடந்தா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம் மற்றும் காய்ச்சலும் இருந்தது.

தாண்டன் உத்தரபிரதேசத்தில் கல்யாண் சிங் அரசில் அமைச்சராக இருந்து உள்ளார். பின்னர் பாஜக-பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியின் மாயாவதி ஆட்சியில் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் இருந்து உள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close