RETamil News
பா.ம.க.வின் முக்கியத்தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குரு காலமானார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவரும் முன்னாள் எம்.எல்.வுமான காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்தி வந்தது.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குரு, சிகிச்சைப் பலனின்றி சற்றுமுன்னர் உயிரிழந்தார்.
அவருடைய மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாமகவின் அதிரடி பேச்சாளராக இருந்த காடுவெட்டி குருவின் மரணம் பா.ம.க வினரிடையே பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.