நிபா வைரஸ் தவிர்ப்பது எப்படி?சுகாதாரத்துறை விளக்கம்.
நிபா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் காய்ச்சலும் மூச்சுவிடுவதில் சிரமும்,இரத்த அழுத்தமும் குறையத்தொடங்கும்எனத் தெரிகிறது. இந்நிலையில் கடுமையான தலைவலியும் 15 நாட்களுக்குப் பின் மூளைக்காய்ச்சலாக மாறவும் செய்கிறது.
தவிர்க்கவேண்டியவை :
மரங்களிலிருந்து விழும் பழங்களை சாப்பிட வேண்டாம் என்றும், பதப்படுத்தப்படாத கள்ளை குடிக்கவேண்டாம் என்றும் . பன்றிகளின் வளர்ப்பு இடங்களை சுத்தமாக பாதுகாக்கவேண்டுமெனவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டறியப்படவில்லை மாறாக பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சலை எதிர்க்க தேவையான சப்போர்ட்டிக் தெரபி கொடுப்பதினால் பாதிப்பின் அளவை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம்.
தமிழகத்தில் பாதிப்பு உள்ளதா?
இது குறித்து சுகாதாரத்துரை செயலாளர் ராதாகிருஷ்ணன் தேவையற்ற பீதி வேண்டாம் எனக் கூறியவர் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் கூடுதல் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட சுகாதாரத் துறை மூலம் மேற்கொள்ளப்படும் என்றார்.