fbpx
BusinessREசந்தை

தங்கம் விலை ஏறுமுகம்!

Gold rate hike

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்துக்கு மக்களிடையே மீண்டும் தேவை அதிகரித்துள்ள நிலையில் இந்த விலை உயர்வு காணப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,472 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று இதன் விலை 4,443 ஆக இருந்தது. அதாவது இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 29 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று 35,544 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 232 ரூபாய் உயர்ந்து, ரூ.35,776 ஆக இருக்கிறது.

24 கேரட் தூய தங்கத்தின் விலையிலும் இன்று பெரிய அளவில் விலையேற்றம் இருக்கிறது. ஒரு கிராம் ரூ.4,652லிருந்து இன்று ரூ.4,681 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.46.70 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.46.60 ஆக இருந்தது. ஒரு கிலோ வெள்ளி 46,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close