fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு எதிரொலி;லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!!

டீசல் விலை உயர்வைக் கண்டித்து கடந்த 18ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக திரும்ப  பெறப்பட்டுள்ளது.

டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டணம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் போராட்டத்தை அறிவித்தது.

இதனால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கான லாரிகள் ஓடவில்லை. டீசல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸும், அடுத்த மாதம் 20ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் வரும் 27ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார்.

அதன்பேரில் தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகவலை தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் தலைவர் சுகுமார்  கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close