இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் ஆய்வு ….
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ், திருச்சி, மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் மற்றும் திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு நேரில் சென்று அவற்றின் நிர்வாகம் மற்றும் பக்தர்களுக்கான வசதிகள், பிரசாத விற்பனை நிலையம் ஆகியற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.அருள்மிகு தாயுமானசுவாமி கோயிலுக்கு புதிய அம்பாள் மரத்தேர் உருவாக்கிடும் பணி உபயதாரர் நிதி ரூ. 57.80 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. அப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ், திருத்தேர்பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுரைகளைவழங்கினார் தொடர்ந்து திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயிலுக்கு சென்ற அமைச்சர் ரமேஷ், திருக்கோயில் நிர்வாகம், யானை பராமரிப்பு மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். திருக்கோயில் பிரசாத விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் மற்றும் பிரசாதங்கள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டுள்ளதா எனவும், உணவு பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்பட்டுள்ளதா எனவும் பரிசோதித்தார்.அவ்வாறுகுறிப்பிடப்படாததை கண்டறிந்த அமைச்சர், அந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது எனவும், இது
தொடர்பாகசம்மந்தப்பட்டபிரசாதகடைஒப்பந்ததாரரிடமிருந்து உரிய விளக்கம் பெற வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.பின்னர் திருக்கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட குடிநீர்தொட்டியில் (RO Unit) குடிநீரின் TDS அளவை கணக்கீடு செய்து, அது குறைவாக இருந்ததை கண்டறிந்து, அதில் இயற்கை கனிமச் சத்துக்கள் மற்றும் ஊட்டச் சத்துக்கள் போதுமான அளவில் இல்லாமல் இருக்கக்கூடும் என்பதால் பாதுகாக்கப்பட்ட குடிநீர்தொட்டியினைதொடர்ச்சியான கால இடைவெளியில் பராமரிப்பு மேற்கொள்ளவும், அதற்கென தனியாக பதிவேடுகளை பராமரிக்கவும் அமைச்சர் உத்தரவிட்டார்.கோயில் வளாகத்திலுள்ள கழிப்பறைகள் தினமும் குறைந்தபட்சம் ஐந்து முறை சுத்தம் செய்யப்பட வேண்டுமென்றும், ஒவ்வொரு முறை சுத்தம் செய்யும் போதும் சுத்தம் செய்த நேரம் மற்றும் பணியாளர் விவரங்களுடன் கூடிய தனிப் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். திருக்கோயில்களில்பக்தர்களின் காலணிகளைபாதுகாத்திடஅமைக்கப்பட்டுள்ளஇலவசகாலணிபாதுகாப்புமையங்களைசிறந்தமுறையில்பராமரித்திடவும்அறிவுரைகளைவழங்கினார்.இத்திருக்கோயில் சார்பில் ரூ. 5.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குகொண்டுவரஅலுவலர்கள்மற்றும்பொறியாளர்களுக்குஅறிவுறுத்தினார்.திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் யானை அகிலாவுக்கு இன்று 24-வது பிறந்தநாள். அதனை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் முன்னிலையில் திருக்கோயில் யானை அகிலாதனதுஇருப்பிடத்திலிருந்து மேள, தாள முழக்கத்துடன் நந்தவனத்திற்கு அழைத்து வரப்பட்டு கஜ பூஜை நடத்தப்பட்டது. பின்னர் அமைச்சர், திருக்கோயில் யானைக்கு இனிப்புகள், பழங்கள், காய்கறிகளை வழங்கி ஆசி பெற்றார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், “தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து திருக்கோயில் நிர்வாகங்களும் பிரசாதம் விற்பனை நிலையங்கள், அன்னதான சமையலறைகள், குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு வசதிகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டுமெனவும், பிரசாத விற்பனை நிலையங்களில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதனை தொடர்ச்சியாக ஆய்வு செய்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளைமீறுவதுஅல்லதுகாலாவதிதேதிகுறிப்பிடப்படாதபொருட்களைவிற்பனைசெய்வதுபோன்றகுற்றச்செயல்கள்ஏதேனும்கண்டறியப்பட்டால்,பிரசாதகடைஒப்பந்ததாரர்கள் மற்றும்கடைநடத்துபவர்களிடம்விளக்கம்கோரப்பட்டு,தேவையானநடவடிக்கைகள்உடனடியாகஎடுக்கப்படவேண்டுமென்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு கண்டறியப்பட்டபிரசாதகடையின்விற்பனைநடவடிக்கைகள்உடனடியாகநிறுத்தப்படுவதோடு, இது குறித்து அமைச்சர் அலுவலகத்திற்கு உடனடியாகதெரிவிக்கப்பட வேண்டுமென்றும், தகுதியான அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே அந்தக் கடைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.