fbpx
RETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

திமுகவின் பொருளாளர் இவர் தான்…! ஸ்டாலின் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

DMK stalin statement about treasure

சென்னை:

திமுகவின் பொருளாளராக துரைமுருகனே நீடிப்பார் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுகவில் பொதுச்செயலாளராக இருந்தவர் பேராசிரியர் க. அன்பழகன். உடல்நலக் குறைவால் கடந்த மார்ச் மாதம் சென்னையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளர் பதவி காலியானது.

திமுகவின் முக்கியப் பதவியாக கருதப்படும் இப்பதவிக்கு அடுத்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க பொதுக்குழு மார்ச் 29ம் தேதி சென்னை அறிவாலயத்தில் கூடுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே திமுகவின் பொருளாளர் துரைமுருகன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு, கொரொனா ஊரடங்கு அறிவிக்கப்பட திமுகவின் பொதுக்குழு கூட்டம் ரத்தானது.

இந்நிலையில் பொதுக்குழு கூடும்வரை பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

எனவே, துரைமுருகனின் ராஜினாமா கடிதம் மீதான நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக ஸ்டாலின் அறிக்கை ஒன்றில்  தெரிவித்துள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close