fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

திமுகவின் முக்கிய பிரமுகருக்கு கொரோனா…! மருத்துவமனையில் சிகிச்சை!

DMK kalairajan got corona

சென்னை:

திமுகவின் இலக்கிய அணி இணைச்செயலாளரும், சென்னை தியாகராய நகர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.பி.கலைராஜனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இது உறுதியாகி இருக்கிறது. இதையடுத்து வி.பி.கலைராஜன் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கனவே தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதிமுக எம்எல்ஏ பழனி கொரோனா பாதிப்பால் குடும்பத்துடன் மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.

இப்போது தி.மு.க.வைச் சேர்ந்த மற்றொரு நிர்வாகி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது, அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close