fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

டெல்லியில் நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் திடீரென தீ விபத்து…!

Delhi parliament building got fire

டெல்லி:

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இணைப்பு கட்டிடம் ஒன்றின் 6வது தளத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் 5 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர்.

அவர்கள் தீயை அணைக்கும் பணியில் இறங்கி உள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் இதுவரை தெரிய வரவில்லை.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து பேசப்பட்டு வரும் நிலையில் இணைப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close