fbpx
RETamil News

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு – முதல் முறையாக அறிக்கையை வெளியிட்டது சீன அரசு

இந்த கொரோனா வைரஸானது முதல் முதலில் சீனாவில் உள்ள உகான் என்ற நகரத்தில் காணப்பட்டது. இதனால் இன்று உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அல்லோல பட்டு உள்ளது. பல நாடுகளில் தினந்தோறும் உயிரிழப்புகள் ஏற்பட்டு கொண்டே உள்ளது. இந்த வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே உள்ளது.

கொரோனா வைரஸ் பொறுத்தவரை சீனா பல தகவல்களை மூடி மறைப்பதாகவும் , அதன் மூலம் இன்று உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு வகையான சிக்கல்களில் மாட்டிக்கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் அதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வரை அனைத்தையும் விளக்க அறிக்கையாக சீனா வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் , கடந்த ஆண்டு டிசம்பர் கடைசியில் சீனாவின் உகான் நகர நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பட்டு மையம் கொரோனா வைரஸை முதல் முறையாக கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.இது குறித்து அனைத்து மருத்துவர்களுக்கும் வுஹான் நகராட்சி சுகாதார ஆணையம் அவசரமாக அறிக்கையை அனுப்பியது, அதன் பின் அடுத்தநாளே , கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் , முகக்கவசம் அணியும்படியும்   உகான் நகராட்சி ஆணைய இணையதளத்தில் வெளியிட்டது.

இதன் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பற்றி இந்த அறிக்கையில் விளக்கப்பட்டாலும் , உகானில் உள்ள ஹுனான் கடல் உணவு சந்தையில் இருந்து அந்த நோய் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பான எந்த குறிப்பிட்ட தகவலும் இல்லை.அதே போல் அந்த நோய் தொற்றை முதலில் கண்டறிந்து அது தொடர்பாக சமூக ஊடகங்களில் எச்சரிக்கை செய்து , பின்னர் அந்த நோய் தொற்றுக்கே பலியான மருத்துவர் லி வென்லியாங் குறித்து எந்த தகவலும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் இந்த நோய் தொற்று ஏற்பட்டதில் பல உயிர்கள் பாதிக்கப்பட்டாலும் 2 மாத கடுமையான கட்டுப்பாடுகளினால் நோய் தொற்று முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் ஹூபே மாகாணத்தில் தினசரி ஒரு சிலர் இறப்பது வாடிக்கையாக இருந்தது.தற்போது முதல் முறையாக அங்கு நேற்று ஒருவர் கூட கொரோனாவுக்கு பலியாகவில்லை என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும் உள்நாட்டை சேர்ந்த யாருக்கும் புதிதாக நோய் தொற்று ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close