fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…! சென்னை வானிலை மையம் தகவல்!

Chennai weather report about rain today

சென்னை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென் மேற்கு பருவ காற்று தீவிரமடைந்து வருவதாலும், வெப்பச்சலனத்தின் காரணமாகவும் வட கடலோர மாவட்டங்களில் சில பகுதிகளிலும், மேற்கில் கோவை, தர்மபுரி, சேலம் மற்றும் புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். அதிகபட்சமாக 35 டிகிரி வரை வெயில் பதிவாகும்.

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள், இந்த பகுதிகளுக்கு, வரும், 5ம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close