fbpx
ChennaiGeneralRETamil Newsதமிழ்நாடு

சென்னையில் பிரபல மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்…! நோயாளிகள் பீதி!

Bomb threat to famous hospital in Chennai

சென்னை:

சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் கூறியுள்ளார்.

இதனால் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள், நர்சுகள் பதற்றம் அடைத்தனர். இதுதொடர்பாக காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

வெடிகுண்டு மிரட்டலால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. மிரட்டல் விடுத்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close