மீண்டும் பணமதிப்பிழப்பு பீதி : இந்திய பணத்தை யாரும் கையில் வைத்துக்கொள்ள வேண்டாம் பூடான் அரசு எச்சரிக்கை!!!
எப்போது வேண்டுமானாலும் செல்லாமல் போகலாம் எனவே இந்திய ரூபாயை ரொக்கமாக வைத்திருக்காதீர்கள் என பூடான் ரிசர்வ் வங்கி திடீரென எச்சரித்ததுள்ளதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீண்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டால் பூடான் அரசு அதற்கு பொறுப்பாகாது என்றும் இந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய ரூபாய் நோட்டுக்கள் நேபாள், பூடானில் செல்லும் என்பதால் அங்குள்ள மக்கள், இந்திய ரூபாயை தாராளமாக புழங்கி வருகின்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டு 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் அறிவித்தபோது அந்நாட்டு மக்கள் தாங்கள் வைத்திருந்த நோட்டுக்களை மாற்ற மிகுந்த சிரமப்பட்டனர்.
இந்த அறிவிப்பால், நேபாளம், பூடான் நாடுகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. இந்திய அரசின் திடீர் அறிவிப்பால் அந்த நாட்டில் உள்ள மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி, பணத்தை வங்கிகளில் கொடுத்து மாற்றினார்கள். ஏறக்குறைய ஒரு ஆண்டுக்குப் பின்னர்தான் அங்கு நிலைமை சீரடைந்தது.
இந்நிலையில் பூடான் அரசு தனது மக்களுக்குக் திடீரென ஒரு முன் எச்சரிக்கை அறிவிப்பபை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய ரூபாயை கையில் ரொக்கமாக அதிகமான அளவுக்கு வைத்திருக்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நியாவில் மீண்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்குப் பூடான் அரசு பொறுப்பேற்க முடியாது என்று பூடான் ரிசர்வ் வங்கியான ராயல் மானிட்டரி அத்தாரிட்டி எச்சரித்துள்ளது
இந்திய ரூபாய் நோட்டுகளைக் கையில் ரொக்கமாக வைத்திருக்கும் மக்கள், முடிந்தவரை அதை வங்கியில் செலுத்தி தேவைக்கு ஏற்றார் போல் எடுத்துப் பயன்படுத்துங்கள் என்றும். இந்திய ரூபாயை ரொக்கமாகக் கையில் வைத்து செலவு செய்வதையும், சேமித்து வைப்பதையும் தவிர்க்கவும் என ராயல் மானிட்டர் அதாரிட்டி கேட்டுக்கொண்டுள்ளது.
பூடான் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஒரு பண மதிப்பிழப்பு நடவடிக்கை இருக்குமோ என மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.