fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் – சட்ட மசோதா தாக்கல்

ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் சட்டம் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு , ஏராளமான பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.

முதல் முறையாக இந்த சட்டம் அமலுக்கு வந்ததால் தடையை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட்டது. மறுமுறை வீதியை மீறுபவர்களுக்கான தண்டனை மற்றும் அபராதம் பற்றிய எந்த விவரமும் தமிழக அரசின் ஆணையில் இடம் பெற்றிருக்கவில்லை.

தற்போது பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்கான தண்டனை மற்றும் அபராதம் பற்றிய விவரங்கள் அடங்கிய மசோதாவை எஸ்.பி.வேலுமணி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவில் பிளாஸ்டிக் தடையை மீறினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close