fbpx
BusinessRETamil Newsஅரசியல்இந்தியா

அமித்ஷா பதவி வகித்த வங்கியில் தான் அதிகளவு செல்லாத ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் எங்கேயோ இடிக்குதே!!

மும்பை:

பணமதிப்பிழப்பின் போது அமித்ஷா இயக்குனராக இருந்த கூட்டுறவு வங்கியில்  தான் நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளிலேயே அதிகளவிலான பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுக்கள் டெபாசிட் ஆகியிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

இது குறித்து ‘டிட்டீ நெக்ஸ்ட்’ என்ற ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை விபரம் வருமாறு;

2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இந்த வகையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.745.59 கோடி ரூபாய் மாற்றப்பட்டுள்ளது. பிரதமர் அறிவிப்பு வெளியான 5 நாட்களில் இந்த தொகை மாற்றப்பட்டுள்ளது. நவம்பர் 14ம் தேதிக்கு பின்னர் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற கூட்டுறவு வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வங்கியின் இயக்குனராக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நீண்ட நாட்களாக பதவி வகித்துள்ளார். 2000ம் ஆண்டில் வங்கியின் தலைவராகவும் இருந்துள்ளார். 2017ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி  வரை இந்த வங்கியின் மொத்த டெபாசிட் ரூ.5,050 கோடியாகும். 2016&17ம் ஆண்டில் நிகர லாபம் ரூ.14.31 கோடியாகும்.

இதை தொடர்ந்து ராஜ்காட் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவராக குஜராத் பாஜக அமைச்சர் ஜெயஸ்பாய் விட்டல்பாய் இருந்துள்ளார். இந்த வங்கியில் ரூ.693.19 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை நபார்டு தலைமை பொது மேலாளர் சரவண வேல், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட ஒரு மனுவுக்கு பதிலளித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள 7 பொதுத் துறை வங்கிகள், 32 மாநில கூட்டுறவு வங்கிகள், 370 மாவட்ட கூட்டுறவு வங்கிகள் 36 தபால்நிலையங்களில் மொத்தம் ரூ.7.91 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது..

Related Articles

Back to top button
Close
Close