fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரன், மனைவிக்கு கொரோனா…! மருத்துவமனையில் அனுமதி!

ADMK Mla sathan got corona

சென்னை:

பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

நாடு முழுவதும் வேகமாக பரவி உள்ள கொரோனா, தமிழகத்திலும் உச்சத்தில் இருக்கிறது. தலைநகர் சென்னையில் வேகமாக பரவிய கொரோனா தொற்று, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலும் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது.

இந் நிலையில், பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  சதன் பிரபாகரனின் மனைவி, மகனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

இதையடுத்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ சதன் பிரபாகரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அனைவரும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close