GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு
சாத்தான்குளம் தந்தை, மகன் போலீசாரால் மரணம்…! தூத்துக்குடி டிஜிபிக்கு ஹைகோர்ட் உத்தரவு!
Saathankulam double murder case DGP summoned

மதுரை:
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் அடைந்த சம்பவத்தில் தூத்துக்குடி டிஜிபி ஆஜராக மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டு உள்ளது.
சாத்தான்குளத்தில் போலீசாரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் சித்ரவதையில் உயிரிழந்தனர்.
தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து, கடையடைப்பு போராட்டங்கள் நடந்து வருகின்றன. குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந் நிலையில் இந்த வழக்கை தாமாக முன்வந்து மதுரை உயர்நீதிமன்றத கிளை நீதிமன்றம் விசாரிக்க முன்வந்துள்ளது. டர்ந்து வழக்கில் தூத்துக்குடி டிஐஜி காணொளி வாயிலாக ஆஜராக வேண்டுமென மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
















