அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து ஜோ பிடேன் போட்டி: ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக தேர்வு!!

வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடேன் முறைப்படி வெற்றி பெற்றார்.
அமெரிக்காவில் வரும் (2020) நவம்பரில் நடக்கும் அதிபர் தேர்தலில், ஆளும் குடியரசு கட்சியின் தற்போதைய அதிபர் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்க்கு மாகாண தேர்தல் நடைபெற்றது.

இதில் முன்னாள் துணை அதிபரான ஜோ பிடேன் நேற்று முறைப்படி வெற்றியடைந்தார்.
இவரை எதிர்த்து போட்டியிட்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக பின்வாங்கினர்.
ஆனாலும், அமெரிக்க தேர்தல் விதிமுறைப்படி, கட்சியில் 1,991 பிரதிநிதிகள் ஓட்டு கிடைத்தால் தான் வெற்றியடைய முடியும்.
அந்த எண்ணிக்கையை பிடேன் தற்போதுதான் பெற்றுள்ளார். அவருக்கு 1,993 பிரதிநிதிகள் ஆதரவு அளித்தனர்.
இதன் காரணமாக, அவர் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக முறைப்படி தேர்வாகி உள்ளார்.
இவர்,டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக களமிறங்க உள்ளார்.















