fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

பின்வாசல்…! முகக்கவசம்…! டிஜிட்டல் பரிவர்த்தனை…! மாற்றங்களுடன் தொடங்கிய பேருந்து போக்குவரத்து…!

Passenger guidelines in buses

சென்னை:

பேருந்துகளில் பயணிகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 5ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் சென்னை நீங்கலாக இன்று பேருந்துகள் ஓட தொடங்கி உள்ளன.

மொத்தம் 6 மண்டலங்களில் பேருந்து வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்தில் நடத்துனர்கள், பயணிகள் எதை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும். பான், குட்கா போன்ற புகையிலை பொருட்களை பொது வெளியில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நகர பேருந்துகளில் பயணச்சீட்டு, பண பரிமாற்றத்தை தவிர்க்க பயணிகள் மாதந்திர பாஸ்களை பெற்றுக் கொள்ள வேண்டும். பாஸ் அளிக்கும் அலுவலகங்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும்.

பயணிகள் அனைவரும் பின் வாசல் வழியாக ஏறி, முன்வாசல் வழியாக இறங்க வேண்டும். இடைவெளி விட்டு பயணிகள் அமர வேண்டும். பணிக்கு வரும் ஓட்டுனர், நடத்துனரின் உடல் வெப்பநிலைகளை தினமும் பரிசோதிக்க வேண்டும். பயணிகளும், ஊழியர்களும் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள், வழிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Tags

Related Articles

Back to top button
Close
Close