கொரோனாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை சாத்தியமா…? மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு சென்னை ஹைகோர்ட் கேள்வி!
Chennai high court notice to ayush ministry

சென்னை:
கொரோனா நோயாளிகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளிப்பது தொடர்பாக 4 வாரங்களில் பரிசீலிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவரது தமது மனுவில், சீனாவின் அக்குபஞ்சர் மூலமாக 1979 ம்ஆண்டு 112 வகையான நோய்களை குணப்படுத்த முடியும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு அலோபதி மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில் அக்பஞ்சர் மூலமாக சீனாவில் அந்நோய் கட்டுப்படுத்தப்பட்டதாக உலக சுகாதார நிறுவனமும் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே ஆய்வு மேற்கொண்டு அக்குபஞ்சர் சிகிச்சையை இந்தியாவில் மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கை நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் 3 வாரங்களில் மத்திய அரசுக்கு மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், அதை மத்திய ஆயுஷ் அமைச்சகம் 4 வாரங்களில் பரிசீலித்து உரிய முடிவு எடுக்க உத்தரவிட்டனர்.















