ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு
சென்னையில் அரசு மருத்துவமனை நர்ஸ் கொரோனாவுக்கு பலி…! மருத்துவ உலகம் அதிர்ச்சி!
Chennai government hospital nurse dead due to corona

சென்னை:
சென்னையில் அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் தலைமை செவிலியர் கடந்த ஏப்ரல் மாதத்தில் பணி ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். எனினும், இதில் பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.
பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட தலைமை செவிலியர் ஒருவர் கொரோனாவால் பலியான சம்பவம் மருத்துவத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.















