fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான விடுபட்ட தேர்வு தேதி…! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

11 and 12th exam dates announced

சென்னை:

11 ம் மற்றும் 12ம் வகுப்பு விடுப்பட்ட தேர்வு தேதியையும் பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மார்ச்சில் நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டன. பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு ஜூன் முதல் தேதியிலிருந்து 10ம் வகுப்பு தேர்வுகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது 4ம் கட்ட ஊரடங்கு மே 31 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மறுநாள் தேர்வுகள் தொடங்குவதில் உள்ள சிரமங்கள் பற்றி பல தரப்பில் இருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.

இந்நிலையில் இன்று முதலைமைச்சருடன் ஆலோசித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வுகளை ஒத்தி வைத்து புதிய தேர்வு அட்டவணையை அறிவித்தார்.

அதன்படி ஜூன் 15 ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. ஜூன் 15 – மொழிப்பாடம், ஜூன் 17 – ஆங்கிலம், ஜூன் 18 – கணிதம், ஜூன் 22 – அறிவியல், ஜூன் 24 – சமூக அறிவியல், மேலும் ஜூன் 20 விருப்பப்பாடமும், ஜூன் 25 தொழில்கல்வி தேர்வுகளும் நடைபெறும்.

விடுபட்ட 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 16ம் தேதியும் 12 ஆம் வகுப்பு எஞ்சிய தேர்வு ஜூன் 18 ஆம் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close