fbpx
RETamil NewsTrending Nowதமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் இயங்குமா…? முதலமைச்சர் உத்தரவில் இருப்பது என்ன?

In tamilnadu all educational institution remain closed till further notice

சென்னை:

பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள் செயல்படுவதற்கான தடை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 4ம் கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா தாக்கம் ஓயவில்லை. நாள்தோறும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில்  4வது கட்ட ஊரடங்கை நாடு முழுமைக்கும் பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். தமிழகத்திலும் ஊரடங்கை வரும் 31ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார்.

இந்த ஊரடங்கின் போது தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கு நீட்டிப்பு காலத்தில் திரையரங்குகள், பார்கள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள் இயங்க விதிக்கப்பட்ட தடை தொடரும்.

மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை தடை தொடரும் என்று அறிவித்து உள்ளார். அதேபோல் வழிபாட்டு தலங்களில் பொது மக்கள் வழிபாடு செய்ய, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை உத்தரவு நீடிப்பதாகவும் முதலமைச்சர் தமது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close