fbpx
ChennaiRETamil Newsதமிழ்நாடு

சென்னையில் இந்த பகுதியிலும் கால் வைத்த கொரோனா…! என்னாகுமோ…?

Chennai kannagi nager 23 corona cases

சென்னை: சென்னை கண்ணகி நகரில் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் சென்னை நேற்று ஒரே நாளில் உச்சம் பெற்றுவிட்டது. ஒட்டு மொத்த பாதிப்பு 8000ஐ கடந்துவிட்டது. இந்நிலையில் கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் 23 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் 23 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. ஓஎம்ஆர் அருகில் உள்ள, கண்ணகி நகர், செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய பகுதிகளில், தொற்று பாதிப்பு அதிகரிப்பதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இங்கு மக்கள் நெருக்கம் என்பது மிக அதிகம். இரு குடியிருப்பில், பெரும்பாலான வீடுகள், குறைந்த சதுர அடி பரப்பளவு கொண்டவை. ஆகையால் சமூக விலகலுக்கான வசதிகள் குறைவு என்பதால் தொற்று அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close