fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

கோயில்களை திறக்கலாமா..? அரசின் முக்கிய அறிவிப்பு

Hindu religious announcement about temple

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் 33 சதவீதம் பேருடன் பணியாற்ற இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திரரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் அனைத்து கோயில்களும் ‛அ’ மற்றும் ‛ஆ’ பிரிவு அலுவலர்கள் 33 சதவீதம் பேருடன் பணியாற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அலுவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும். அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் தினமும் அலுவலகத்திற்கு வர வேண்டும். பணிக்கு வரும் பணியாளர்கள் முகக்கவசத்துடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

சளி, இருமல், காய்ச்சல் உள்ள பணியாளர்கள் பணி செய்ய அனுமதிக்க கூடாது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

கோயில் வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களை தவிர பக்தர்கள் உள்பட வேறு யாருக்கும் அனுமதியில்லை. கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்றைவையும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close