அம்மா உணவக ஊழியருக்கு கொரோனா தொற்றியது எப்படி..? வெளியான ஷாக் தகவல்
How amma umavagam employee got corona

சென்னை: சென்னையில் அம்மா உணவக ஊழியருக்கு கொரோனா தொற்று எப்படி வந்தது என்பது பற்றி புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கால் தமிழகம் உணவு விடுதிகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, அம்மா உணவகத்தில் இலவசமாக உணவுக்கு ஏற்பாடு செய்தது தமிழக அரசு. தினமும் பல ஆயிரக்கணக்கான பேர் அங்கு சென்று சாப்பிட்டு வந்தனர்.
இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவக பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
வெங்கடேசன் தெருவில் வசிக்கும் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இந்த பெண் ஊழியரின் வீடு இருப்பதால் கொரானா பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதனால் அவருடன் தொடர்புடைய பலரையும் தனிமைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதி அம்மா உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது.















