fbpx
RETamil NewsTrending Nowதமிழ்நாடு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது….? இதோ வெளியானது புதிய விவரம்..!

SSLC exam may in June 3rd week

சென்னை: 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எதிரொலியாக தமிழகத்தில் மட்டும், 10ம் வகுப்பு பொது தேர்வு இன்னும் நடத்தப்படவில்லை. தேர்வை ரத்து செய்யுமாறு,பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆனால், தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை. கட்டாயம் தேர்வு நடைபெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெளிவாக அறிவித்துவிட்டார்.

இந் நிலையில் ஜூன் 3வது வாரத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்த நாட்களில் என்ன தேர்வு என்பது பற்றிய அட்டவணை இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

அதேநேரத்தில், மொழி பாடங்களை தவிர்த்து, முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாமா என்று ஒரு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close