fbpx
REதமிழ்நாடு

மே 3 வரை சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு!

ஊரடங்கு காலம் முடியும் வரை சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து  அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 18 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள்  நடைமுறையில் உள்ளன.

இந்த ஊரடங்கால் ஆதரவற்றோர் உணவுக்கு வழியின்றி தவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இந்நிலையில்,

ஊரடங்கு காலம் முடியும் வரை சென்னை மாநகராட்சியில் உள்ள மொத்தம் 407 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

உணவு உண்ண வரும் பொதுமக்களிடம் இடம் பெயர், தொலைப்பேசி எண் ஆகியவற்றை வாங்கி கொண்டு  இலவசமாக உணவு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close