fbpx
REஅரசியல்இந்தியா

ரேஷன் அரிசியை கொடுத்து சானிடைசர் தயாரிக்க எத்தனால் வாங்க மத்திய அரசு முடிவு!?

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதில் சானிடைஸர்கள் முக்கிய பங்கு  வகிக்கின்றன.

அதிலும் ஆல்கஹால் கலந்த கை சுத்திகரிப்புத் திரவம் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொடர்பான முதல் செய்தி வந்ததிலிருந்தே இவ்வகை  சானிடைஸர்களுக்கு நாடெங்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதைச் சரிக்கட்ட, அரிசியின் மூலம் சானிடைஸர்கள் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய உணவுக் கழகத்திலிருந்து கிடைக்கும் உபரி அரிசியை இதற்காகப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, அதன் மூலம் எத்தனால் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஏழை மக்களுக்கு உணவில்லாத இந்தத் தருணத்தில் அரிசியை  பணக்காரர்கள் பயன்படுத்தும் சானிடைஸர் தயாரிப்புக்கு ஏற்றுமதி செய்வது மிகப்பெரும் வரலாற்று தவறு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டம் ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் திட்டம் என பொதுமக்கள் குமுறிக்கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close