Tamil News
அ.தி.மு.க மற்றும் பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேர உள்ளது – பொன்.ராதாகிருஷ்ணன்

அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பாஜக-வுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.மேலும் இந்த கூட்டணியில் தே.மு.தி.க வும் இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் , செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது;
“அ.தி.மு.க மற்றும் பாஜக கூட்டணியில் மேலும் பல காட்சிகள் சேர வாய்ப்புகள் உள்ளது. தே.மு.தி.கவை சேர்க்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அ.தி.மு.க – ப.ம.க கூட்டணி குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் அநாகரிகமான வார்த்தைகளை உபயோகித்து விமர்சித்துள்ளார்” என்று கூறினார்.















