fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

சீர்காழி அடுத்த தென்னலகுடியில் 20 நபர்களை கடித்து குதறிய குரங்கு பிடிபட்டது !

சீர்காழி,
நாகை மாவட்டம், சீர்காழி அருகே தென்னலக்குடி கன்னிகோவில் தெருவில் கொடூர குரங்கு ஒன்று சுற்றி திரிந்தது.  இந்த தெருவில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அது அங்குள்ள 20 க்கும் மேற்பட்டோரை கொடூரமாக கடித்து குதறி உள்ளது.  இந்த குரங்கு  காண்போரை எல்லாம் கடித்து குதறியுள்ளது.
10 க்கும் மேற்பட்ட ஆடு, நாய் போன்ற கால்நடைகளையும்  கடித்து குதறி உள்ளது.
இதனால் குரங்கை பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு பலமுறை கிராம மக்கள் புகார் அளித்தனர்.
ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், கிராம மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு வெளியேறினர்.
இந்நிலையில் நேற்று  ஒற்றை குரங்கு வன துறையினரிடம் பிடிபட்டு உள்ளது.இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close