fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

8 மாவட்டங்களில் இன்று கனமழை….! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

8 districts may receive rain today, MET announced

சென்னை:

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், விழுப்புரம், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும். ஜூலை 2 வரை, மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close