RETamil News

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 52 பேர்.!

தமிழகத்தில் புதிதாக கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது.

இன்று 52 பேருக்கு கொரோனா  தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை சற்று முன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,937ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 52 பேர்களில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 47 பேர்கள்.

இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 570 ஆக உயர்ந்துள்ளது.

இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 90% பேர்கள் சென்னையில் உள்ளவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவில் இருந்து 81 நபர்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து தமிழகத்தில் இதுவரை 1101 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 7,176 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதனையடுத்து தமிழகத்தில் இதுவரை மொத்தம் 94,781 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close