RETamil News

4 நாட்கள் ஊரடங்கு எதிரொலி!: பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்கள்!!.

சென்னை:

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை, கோவை, மதுரையில் வரும் ஏப்ரல் 26 முதல் 29 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் சேலம், திருப்பூரில் ஏப்ரல் 26ஆம் தேதி 29 வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால் அத்தியாவசிய கடைகள் எதுவும் திறக்கப்படாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குறிப்பாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக அறிவிப்பு வந்துள்ளது.

நாளை முதல் புதன் கிழமை வரை கோயம்பேடு சந்தையில் கடைகள் திறக்கப்படாது என்றும் மொத்த விற்பனை கடைகள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையின் பல இடங்களில் மளிகை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மக்கள் நீண்ட வரிசையில் நின்று அத்தியாவசிய பொருட்கள் வாங்க காத்து கிடக்கின்றனர்.

இருப்பினும் பல இடங்களில் மக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பதாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

Related Articles

Back to top button
Close
Close