RETamil News

தமிழகத்தில் இன்று 33 பேர் பாதிப்பு! குணமடைந்தோர் 27 பேர்.

தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,596 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 27.

மொத்தமாக குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 662.

உயிரிழப்புகள் எதுவும் இன்று ஏற்படவில்லை.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை: 1,629

உயிரிழந்தோர் எண்ணிக்கை: 18

குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை: 662

உயிரிழப்பு எண்ணிக்கை :0

Related Articles

Back to top button
Close
Close