fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பாஜக-வுக்கே அமித்ஷா !

2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் இரண்டு நாள் செயற்குழு கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, ராஜ்நாத்சிங், சுஷ்மாஸ்வராஜ், நிதின்கட்காரி, சுரேஷ்பிரபு, மூத்த தலைவர் அத்வானி, மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில், இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவின் பதவிக்காலத்தை  நீட்டிக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அமித்ஷாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்வதை ஒத்தி வைத்து விட்டு, அமித்ஷா தலைமையிலேயே மக்களவை தேர்தலை சந்திக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, “அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தற்போது இருப்பதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மற்றும் விவசாயிகள் பிரச்சினையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பி வருவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திரமோடி நாளை கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார்.

Related Articles

Back to top button
Close
Close