RETamil News
ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
ஓபிஎஸ் உட்பட 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக கொறடா சக்கரபானி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் ஏகே சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை இன்று விசாரணைக்கு வருகிறது.