Others
கண்ணதாசனின் 43வது நினைவு தினம்..
தமிழக முன்னாள் அரசவைக் கவிஞரும், தமிழ் திரை உலகின் தண்ணிகரில்லா பாடலாசிரியருமான கவியரசர் கண்ணதாசனின் 43வது நினைவு தினத்தையொட்டி, அவர் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், கவியரசர் கண்ணதாசன் இலக்கிய பேரவை.தலைவர் எஸ்.எம்.பழனியப்பன் தலைமை வகித்தார். லெனின் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச்செயலாளர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். தொடர்ந்து கவியரசர் கவிதை தொகுப்புகள் ‘‘அழியாத காவிய கவிதைகள்’’ என்ற தலைப்பில் கருத்துரை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்.