RETamil News
வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் கேரளா; தலைவர்கள் நிதியுதவி !!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்:
கமல்ஹாசன் கேரளாவில் வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு ரூ. 25 லட்சம் நிதிஉதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி :
கேரளாவில் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில் ரூ.1 கோடி வெள்ள நிவாரண நிதி” – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்:
வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி அளிப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரள மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் அவர், வீடு மற்றும் நிலத்தை இழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.