தேனி–இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் 76 ஆவதுஜெனீவா ஒப்பந்த தின விழா போட்டிகள்
தேனி மாவட்ட யூத் ரெட் கிராஸ் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் 76 ஆவது ஜெனீவா ஒப்பந்த
தின விழா போட்டிகள் இன்று(06.08.2025) தேனி, கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.கல்லூரி முதல்வர்திரு.வெற்றிவேல் நிகழ்விற்குதலைமைதாங்கி,போட்டிகளைதுவக்கிவைத்தார்.தேனி மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் திருமதி.லாவன்யா வரவேற்புரை வழங்கினார்.தேனி மாவட்டஇந்தியன்ரெட்கிராஸ்சொசைட்டியின்கௌரவச்செயலாளர்திரு.சுருளிவேல்சிறப்புரைவழங்கினார்.நிர்வாகச்செயலாளர்திருமதி.மீனாம்பிகைபோட்டிகளின்முக்கியத்துவம்மற்றும்விதிமுறைகள்குறித்துவிளக்கினார்.நிர்வாகக் குழு உறுப்பினர் திரு.முகமது சபி வாழ்த்துரை வழங்கினார்.கம்மவார் சங்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைசங்கஒருங்கிணைப்பாளர்திருமதி.பிரேமாஅனைவருக்கும்நன்றிகூறினார்.ஜெனீவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி (தமிழ் மற்றும் ஆங்கிலம்), கட்டுரை போட்டி (தமிழ் மற்றும்ஆங்கிலம்)ஆகியபோட்டிகள்நடத்தப்பட்டது.தேனி மாவட்டத்தில் உள்ள 16 கல்லூரிகளைச் சார்ந்த 60 மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டுசிறப்பித்தார்கள்.ஒவ்வொருபோட்டியிலும்வெற்றிபெறும்முதல்மூன்றுபோட்டியாளர்களுக்கு ஜெனீவா ஒப்பந்த நாள் விழா நிகழ்வில் பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.நன்றி. ஆண்டிபட்டி செய்தியாளர் வேல்முருகன்


