விசாரணைக்காக போலீஸ் வாகனத்தின் மேல் ஒரு பெண்ணை கட்டி சென்ற கொடூரம் ; எங்கே போய் விட்டது சட்ட ஒழுங்கு!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசர் மாவட்டத்தில் உள்ள சவிந்தா தேவி என்ற பகுதியில் சொத்து தகராறு வழக்கில் ஒருவரை பற்றி விசாரிப்பதற்க்காக அப்பகுதிக்கு சென்றனர். ஆனால் அங்கு அந்த நபர் இல்லை அவரது மகனும்-மருமகளும் மட்டும் தான் இருந்தன. அதனால் அவரது மகனை அழைத்து செல்ல போலீசார் முடிவெடுத்தன. ஆனால் அதற்கு அவரது மருமகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தால்.
அதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் அந்த பெண்ணை போலீஸ் வாகனத்தின் மேல் கட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீஸ் வாகனம் வேகமாக சென்றதால் அந்த பெண் வாகனத்தின் மேலிருந்து கீழே விழுந்தால். அதனால் பலத்த காயம் அடைந்த அந்த பெண்ணை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இத்தகைய சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பஞ்சாப் மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவர்கள் பஞ்சாபில் சட்ட ஒழுங்கு சீர் குலைந்துள்ளதாக கூறியுள்ளனர்.