வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கை, நீக்கம், விலாச மாற்றம் செய்ய சிறப்பு முகாம்!
வருகிற ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைந்தவர்கள், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் தங்கள் பெயரை சேர்க்க மனு அளிக்கலாம்.
இதுதவிர பட்டியலில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களையும் மேற்கொள்ளலாம்.
இதற்காக தமிழகத்தில் உள்ள 67 ஆயிரத்து 654 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்த முகாமில், உரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றாம் தேதியன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்கம், மற்றும் விலாசம் திருத்தியமைக்க, வருகிற 23ந் தேதியும், அடுத்த மாதம் 7 மற்றும் 14 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
இந்த முகாம்களுக்கு வர முடியாதவர்கள் அலுவலக நாட்களில் அடுத்த மாதம் 31ம் தேதி வரை விண்ணப்பங்களை அளிக்கலாம்.
இப்பணிகளை மாவட்ட ஆட்சியர்கள், இதற்கென நியமிக்கப்பட்ட 10 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மேற்பார்வையிடுவார்கள்.
http://www.nvsp.in/என்ற இணையதள முகவரியிலும் ஆன்லைன் முறையில் வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். புதிய வாக்காளர் பட்டியல் ஜனவரி 4ம் தேதி வெளியிடப்படும்.