GeneralOthersRETamil NewsTrending Nowதமிழ்நாடு
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை!
SSLC Exam may postpone

சென்னை:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் மார்ச் 27ம் தேதி நடத்துவதாக இருந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது ஜூன் 1ம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்வு கால அட்டவணையும் அறிவிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. நிச்சயம் தேர்வு நடக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஆனால் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ஆகவே 10ம் வகுப்பு தேர்வை தொடங்குமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்துகிறார். எனவே மீண்டும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்புள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது.