
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவால் இன்று மாலை 5.05 மணிக்கு காலமானார்.வயது முதிர்வு காரணமாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த வாஜ்பாய் இன்று மாலை காலமானார் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது.
நாட்டின் பிரதமராக 3 முறை பதவி வகித்தவர். காங்கிரஸ் அல்லாத தலைவராக இருந்து 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தவர்.
பாரத ரத்னா போன்ற அறிய விருதுகளை பெற்றவர்.
வாஜ்பாய் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் :
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் என்னிடம் வார்த்தைகள் இல்லை, உணர்ச்சி மேலோங்கிய நிலையில் இருக்கிறேன், ப.ஜ.க வின் கொள்கைகளை அனைத்து பகுதிகளுக்கும் பரப்பியவர் இன்று நம்முடன் இல்லை. என்று தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைசிறந்த மகனை இந்தியா இழந்துள்ளது என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: வாஜ்பாய் அவர்களின் மறைவு செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரின் இழப்பு நாட்டிற்கே பேரிழப்பு.
நாளை ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறுதி அஞ்சலிக்காக நாளை டெல்லி செல்கின்றனர்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் செய்தியில் கூறியிருப்பது: ஆளுமை, கடமையில் பக்தி, தலைமை பண்பு கொண்டவர் என புகழாரம்
மிகசிறந்த தலைவரை தேசம் இழந்துள்ளது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.