மீண்டும் நிதியமைச்சர் பதவிக்கு திரும்புகிறார் அருண் ஜெட்லி !
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் ஓய்வில் இருந்த அருண் ஜெட்லி பூரண குணமடைந்து அவருடைய நிதியமைச்சர் பதவியை மீண்டும் ஏற்க உள்ளார்.
நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை காரணமாக கடந்த சில மாதங்களாக ஓய்வு பெற்றிருந்தார்.
உடல்நிலை சீரானதையடுத்து மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்ட உள்ளார். மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் மே மாதம் அனுமதிக்கப்பட்டார்.
இதன் காரணமாக அவர் கவனித்து வந்த துறைகள் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது அருண் ஜெட்லி உடல்நலம் தேறி மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். இதனால் அவருக்கான அமைச்சரவை பொறுப்புகளை வழங்க குடியரசுத்தலைவருக்கு பிரதமர் மோடி பரிந்துரை செய்தார்.
ஜெட்லிக்கு நிதித்துறை மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறைக்கான அமைச்சர் பதவியை ஒதுக்கி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். அருண் ஜெட்லி மீண்டும் நிதியமைச்சர் பதவிக்கு திரும்ப உள்ளார்.