fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

மருத்துவமனைகளில் மட்டும் தான் பிரசவம் செய்ய வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவமனைகளில் மட்டும் தான் பிரசங்கம் செய்யும் நிலையை தமிழக அரசு ஒரு வருடத்துக்குள் உருவாக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் மாணவ,மாணவிகள் கலந்துகொண்ட டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

இதில் கலந்து கொண்ட பின்பாக செய்தியாளருக்கு பேட்டி அளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் 99.99 சதவீதம் மருத்துவமனைகளில் மட்டும் தான் பிரசவம் நடப்பதாகவும், இதை 100 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் மருத்துவமனைகளில் மட்டும் தான் பிரசவம் நடக்கும் நிலையில் தமிழக அரசு ஒரு வருடத்துக்குள் கொண்டு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்த அவர் சிலர் விஷமத்தனமாக மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

Related Articles

Back to top button
Close
Close