RETamil News
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொழில் நுட்ப கோளாறு காரணமாக 108 ஆம்புலனஸ் சேவை பாதிப்பு
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 108 சேவை எண் பாதிப்பு அடைந்துள்ளது. தொழில்நுட்பக்கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டு வழக்கம்போல் 108 சேவை இயங்கும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. பொதுமக்கள் தற்காலிகமாக 044-40170100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டன.
மேலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய ஆம்புலன்ஸ் சேவையால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர். இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு 108 சேவை எண் பாதிப்பு சீரானது. வழக்கம்போல் 108 சேவை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.