கொரோனா தடுப்பூசியின் 7 இறுதி வடிவம் – 2 மட்டும் பயனளிக்க வாய்ப்பு – பில்கேட்ஸ் தகவல்

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகள் , அமெரிக்க என மற்ற நாடுகளிலும் பரவி அனைத்து நாடுகளையும் அல்லோலப்பட வைத்துள்ளது. இது ஒரு கொடிய தொற்று நோயாக இருந்தாலும் தற்போது வரை எந்த ஒரு நாடாளும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.
உலகின் பல விஞ்ஞனிகளும் அதற்கு தேவையான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக தற்போதைய நிலை விவரம் பற்றி விளக்கியுள்ள உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கெட்ஸ்
பில்கேட்ஸ் கூறியிருப்பதாவது;
கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பில் அணைத்து முயற்சிகளும் வேகமடைந்து வருகின்றது. அதில் மிகவும் பயனளிக்க கூடிய 7 மருந்துகளை தேர்வு செய்து அதற்காக பல கோடிக்கணக்கான பணம் செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 7 மருந்துகளையும் தயாரிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ஒன்று அல்லது இரண்டு மருந்துகள் கண்டிப்பாக மக்களுக்கு பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் இறுதி வடிவம் பெறப்போரும் 7 தடுப்பு மருந்துகளில் 2 மட்டும் பயனளிக்க கூடியதாக இருந்தாலும் தங்கள் அந்த ஏழுக்கும் நிதி அளிக்க உள்ளோம். இதனால் பலகோடிகள் வீணாகலாம் இருந்தாலும் இறுதி வடிவம் பெரும் அந்த ஒரு மருந்தை கண்டுபிடிக்க அது பயன்படும் என கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கொரோன தடுப்பூசி கண்டறியும் முயற்சிக்காக பில்கேட்ஸ் அறக்கட்டளையானது இதுவரை 100 மில்லியன் டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.















