fbpx
RETamil Newsஇந்தியா

பஞ்சாப் அமிர்தசரஸ் ரயில் விபத்து… மக்களை பாதுகாக்க முயன்ற தல்பீர் சிங் பலி !

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஜோதா பதக் பகுதியில் தசரா கொண்டாட்டத்தின் போது தண்டவாளத்தில் நின்ற மக்கள் மீது ரயில் மோதியதில் 61 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த சம்பவத்தில், தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்ற நாடகத்தில், வழக்கமாக ராவணன் வேடமிடும் தல்பீர் சிங் என்பவரும் உயிரிழந்தார்.

நாடகம் முடிந்த பின்னர் ராவணன் உருவபொம்மை எரிக்கப்படுவதையும் வாண வேடிக்கை நிகழ்ச்சிகளையும் பார்க்க தல்பிர் சிங்கும் அருகில் சென்றார். மக்கள் கூடியிருந்த இடத்தை நோக்கி ரயில் அதிவேகமாக வருவதை பார்த்த தல்பிர் சிங், எச்சரிக்கை மணியை ஒலிக்க முயற்சி செய்தார். அதற்குள் ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தல்பிர் சிங்கிற்கு தாய், மனைவி, எட்டு மாத குழந்தை மற்றும் சகோதரர் உள்ளனர். தல்பிர் சிங்கின் தாயார் சவன் கவுர் கூறுகையில், பல ஆண்டுகளாக ராவணன் வேடத்தில், எனது மகன் தான் நடித்து வந்தார்.

20 ஆண்டுகளாக, ஜோதக் பதக்கில், ரயில்வே டிராக் அருகே 50 மீட்டர் தூரத்தில் உள்ள மைதானத்தில் இருந்துதான் மக்கள் கூடிநின்று தசாரா கொண்டாட்டத்தை வேடிக்கை பார்ப்பார்கள். எனது மருமகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை முதல்வர் அம்ரீந்தர் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக மாஜீஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ள முதல்வர் , 4 வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close